2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

பிரதமரின் இந்திய விஜயத்துக்கு முன் முக்கிய சந்திப்பு

Editorial   / 2025 ஒக்டோபர் 15 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் ஆளும் ஜனதா விமுக்தி பெரமுனா (மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவை இலங்கைக்கான இந்தியத் உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இம்மாதத்தில் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்ய இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், டில்வின் சில்வாவும் சந்தோஷ் ஜாவும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவை இந்திய உயர்ஸ்தானிகள் சந்தோஷ் ஜா சந்தித்து இருதரப்பு நட்புறவில் அண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விவாதித்தார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நெருக்கமான பொருளாதார உறவுகள் குறித்து இருவரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையிலான சந்திப்பு இலங்கையின் பட்டாரமுல்லா நகரில் உள்ள பெலவட்டே பகுதியில் நடைபெற்றது. இலங்கையில் மலையகப் பகுதியில் இந்தியா வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ள வீட்டுவசதித் திட்டம் உள்ளிட்ட நடப்பு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

. இலங்கைக்கு இந்தியா அளித்துவரும் உதவிகளுக்காக தில்வின் சில்வா நன்றி தெரிவித்ததாகவும், இலங்கைக்கு மேலும் உதவிகள் அளிக்கப்படும் என்று உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்ததாக   கூறப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .