2025 நவம்பர் 27, வியாழக்கிழமை

’பேராறு’ குளத்தின் வான் கதவு திறப்பு:பறங்கி ஆறு பெருக்கெடுக்கும் அபாயம்

Editorial   / 2025 நவம்பர் 27 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரொசேரியன் லெம்பேட்

வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக 'பேராறு' குளத்தின் வான் கதவு ஒன்று புதன்கிழமை (26)  திறக்கப்பட்டுள்ளது.எனவே குறித்த வான் நீரானது மன்னார் மாவட்டத்தின் பறங்கி ஆறு ஊடாக பெருக்கெடுக்க வாய்ப்புள்ளது என மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேலும் பேராறு குளத்தின் வான்  கதவுகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே குறித்த வான் நீரானது மன்னார் மாவட்டத்தின் பறங்கி ஆறு ஊடாக பெருக்கெடுக்க வாய்ப்புள்ளது.

எனவே பறங்கி ஆற்றின் தாழ் நில பிரதேசங்களில் வாழும் மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச மக்கள்  மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் மேய்ச்சல் தரைக்காக கால் நடைகளை கொண்டு சென்ற பண்ணையாளர்கள் தங்களின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் தங்களின் பாதுகாப்புக் கருதி திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தொடர்பில் இருக்குமாறும்   மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X