2026 மே 05, செவ்வாய்க்கிழமை

”பரீட்சைகள் திணைக்களம் உறுதியளிக்க வேண்டும்”

Simrith   / 2024 ஒக்டோபர் 31 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

2024 க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் எவ்வித பிரச்சினைகளும் இன்றி சுமூகமாக நடத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உறுதியளிக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். .

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், க.பொ.த (உ/த) பரீட்சைகளை பாதுகாப்பாக நடத்துவதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நம்பிக்கை இழந்துள்ளதாக குறிப்பிட்டார்.

எனவே, 2024 (உ/த) பரீட்சைகள் சிக்கல்கள் இன்றி நடைபெறுவதற்குத் தேவையான முன்னாயத்த நடவடிக்கைகளை பரீட்சைகள் ஆணையாளர் மேற்கொள்ள வேண்டும்.

2023 (A/L) விவசாயப் பரீட்சையின் ஒன்று மற்றும் இரண்டு தாள்கள் கசிந்த சம்பவத்தை அவர் ஊடகங்களுக்கு நினைவுபடுத்தினார். இதனால், மீண்டும் தேர்வு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டு, இரண்டு முறை தேர்வு எழுத முடியாமல், அப்பாவி மாணவர்கள் தான் பாதிக்கப்பட்டனர். 

ஆனால், அதற்கு காரணமானவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .