2026 ஜனவரி 02, வெள்ளிக்கிழமை

பீர் போத்தலுடன் கொண்டாடிய சச்சின் மகள்

Editorial   / 2026 ஜனவரி 02 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோவாவில் விடுமுறையை கொண்டாடிய சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர், சாலையில் பீர் போத்தலுடன்  சென்ற வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

சச்சின் டெண்டுல்கர் வாழ்வின் ஒருபோதும் போதைப்பொருள் மற்றும் குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்ற கொள்கையுடன் இருந்த சூழலில், சாரா டெண்டுல்கர் பீர் போத்தலுடன்  காணப்பட்டிருப்பது விவாதமாகி இருக்கிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று 13 ஆண்டுகளை கடந்த போதும் கூட, சச்சின் டெண்டுல்கரின் விளம்பர வருவாய் இன்று வரை குறையவில்லை. தோனி, விராட் கோலி ஆகியோருக்கு அடுத்தபடியாக சச்சின் டெண்டுல்கர் விளம்பரங்கள் மூலமாக அதிக வருவாயை ஈட்டி வருகிறார்.

ஆனாலும் சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்நாளில் ஒருமுறை கூட போதைப்பொருளை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடித்ததில்லை.

அதேபோல் குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான விளம்பரங்களில் நடித்ததே கிடையாது. இவ்வளவு ஏன், கிரிக்கெட் வீரராக ஆட்டநாயகன் விருது பெற்ற போது கிடைத்த முதல் ஷேம்பைன் போத்தலை கூட சச்சின் டெண்டுல்கர் குடிக்கவில்லை.

அந்த அளவிற்கு சச்சின் டெண்டுல்கர் எப்போதும் குடிப்பழக்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துள்ளார்.

ரசிகர்களுக்கும் அதனை சச்சின் டெண்டுல்கர் எப்போதும் அறிவுறுத்தியும் வருகிறார். இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கர் கோவாவில் பீர் போத்தலுடன் நடந்து செல்லும் வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. இன்ஸ்டாகிராம் மாடலாக வலம் வரும் சாரா டெண்டுல்கர், புதிய தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.

சாரா டெண்டுல்கரும், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லும் காதலித்து வருவதாக தொடர்ச்சியாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அதற்கேற்ப இருவரும் அவ்வப்போது சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சாரா டெண்டுல்கர் கோவாவுக்கு தனது நண்பர்களுடன் சென்றிருக்கிறார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X