Freelancer / 2021 ஜூலை 28 , பி.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் எனப் பயந்து லிட்ரோ திரவ சமையல் எரிவாயு சிலிண்டர்களை நுகர்வோர் சேமிப்பதால் சில பகுதிகளில் போலி எரிவாயு பற்றாக்குறை உருவாக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷாரா ஜெயசிங்க. இன்று (28) தெரிவித்தார்.
சில நுகர்வோர் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று எரிவாயு சிலிண்டர்களை வாங்க ஆசைப்படுவதாகத் தெரிவித்த அவர், லிட்ரோ கேஸ் நிறுவனம் போதியளவான கையிருப்பைக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.
தமது நிறுவனத்தின் சராசரி தினசரி எரிவாயு சிலிண்டர்களின் விற்பனை 80,000 ஆக இருந்தாலும், கடந்த இரண்டு நாட்களில் விற்பனை 200,000 ஐ தாண்டியுள்ளது என்று குறிப்பிட்ட அவர், மக்களுக்கு எரிவாயு பற்றாக்குறை ஏற்படுமோ என்ற அச்சம் இருக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.
14 minute ago
34 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
34 minute ago
42 minute ago
1 hours ago