2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க கூட்டமைப்பின் அதிரடி தீர்மானம்

Freelancer   / 2025 செப்டெம்பர் 29 , பி.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு, அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் செயலாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்தார். 

பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்து, நாளை அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துவிட்டது. 

எனினும், அரச பல்கலைக்கழகங்களில் உள்ள நெருக்கடிகளுக்கு இதுவரையில் தீர்வு காணப்படவில்லை எனக் கூறிய அவர், தற்போது அரச கல்வி வீழ்ச்சியடைந்து கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். 

பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் வெற்றிடங்கள் , தற்போது கடுமையான நிலையில் உள்ளன. 

பேராதனை பல்கலைக்கழகத்திலிருந்து கடந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 200 பேராசிரியர்கள் வெளியேறியுள்ளதாகவும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க குறிப்பிட்டுள்ளார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X