2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பல்கலைக்கழக மாணவன் மரணம் : 11 பேருக்கு வகுப்புத்தடை

Freelancer   / 2025 மே 06 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் மரணம் தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது .

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டனர்.

இதன்படி இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.   .

புஸ்ஸல்லாவை - இஹலகம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சரித் தில்ஷான் என்ற மாணவன் கடந்த 29 ஆம் திகதி பகிடிவதைக்கு உள்ளானதை அடுத்து உயிரை மாய்த்துக்கொண்டதாக அவரது தரப்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X