2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

Simrith   / 2025 ஜூலை 03 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு, துங்கல்பிட்டி பகுதியில் சமிக்ஞையை மீறி சென்ற​ போது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயமடைந்துள்ளார். 

போதைப்பொருள் கடத்தல் குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரை லெல்லம பாலம் அருகே நிறுத்துமாறு பொலிஸார் சமிக்ஞை காண்பித்துள்ளனர் என  பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், மோட்டாரை  நிறுத்தாமல் மிக வேகமாக முன்னேறியதால், பொலிஸார் பின்னால் துரத்திச் சென்றனர், அதன் பிறகு மோட்டார் சைக்கிள் ஒரு லொரியில் மோதியுள்ளது. 

ஒரு சந்தேக நபரை கைது செய்ய முடிந்தாலும், மற்றையவர் தப்பிச் சென்றதால், அவர் பொலிஸாரால் துரத்தப்பட்டார். 

கைது செய்வதிலிருந்து தப்பிக்க முயன்றபோது இரண்டாவது சந்தேக நபரின் காலில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

காயமடைந்த சந்தேக நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .