Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜோ.ஏ ஜோர்ஜ், பாலகிருஷ்ணன் திருஞானம், மொஹமட் ஆஸிக், சுரங்க ரஜநாயக்க
அதிவேக இணைய வசதியை வழங்கும் கூகுள் நிறுவனத்தின் 'செயற்றிட்டம் லூன்' (Project Loon) இன் பலூன்களில் ஒன்று, கண்டி, கம்பளையில் வீழ்ந்ததாகச் செய்தி வெளியாகிய போதிலும், அதில் உண்மைத்தன்மை கிடையாது என அறிவிக்கப்படுகிறது.
புப்புரஸ்ஸ டெல்டா தோட்டம், டேசன் பிரிவு முதலாம் இலக்க தேயிலை மலையிலேயே புதன்கிழமையன்று (18) இரவு 7 மணியளவில் வெடித்து விழுந்ததாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இது தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்துமாறு, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவராண்மையிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, இச்செய்தியில் உண்மை கிடையாது எனத் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவராண்மையின் திட்ட அதிகாரி கவாஸ்கர் சுப்ரமணியம், பலூன்களில் ஒன்று, வானில் வெடித்து சிதறி விழுந்துள்ள செய்தி தவறானது எனவும் அந்த பலூன் தனது பயணத்தைபூர்த்தி செய்து வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் மிரருக்கு அவர் நேற்று வியாழக்கிழமை இதனை கூறினார்.
பலூன் விழுந்தமை முற்றிலும் தவறான தகவல் என தெரிவித்த கவாஸ்கர், குறித்த பலுன் தனது பரீட்சார்த்த முயற்சியை பூர்த்திசெய்து வெற்றிகரமாக தரையிரக்கப்பட்டதாகவும் கூறினார்.
கூகுள் நிறுவனத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, அதிவேக இணைய வசதியை வழங்கும் கூகுள் நிறுவனத்தின் 'செயற்றிட்டம் லூன்' இன் பலூன்களில் மூன்று, இலங்கை வான்பரப்பை வந்தடைந்துள்ளன.
கூகுளால் வழங்கப்படும் இணைய சேவையான இக்கூட்டு முயற்சியில், இலங்கை அரசாங்கத்துக்கு 25 சதவீதப் பங்கும், 10 சதவீதம், நாட்டிலுள்ள தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் என அறிவிக்கப்படுகிறது. எஞ்சிய 65 சதவீதம், இச்சேவையை இலங்கைக்குக் கொண்டுவர, நடவடிக்கைகளை எடுத்த சமத் பலிஹபிட்டியவின் நிறுவனமான சோஷல் கப்பிற்றல் நிறுவனத்துக்கு உரியது எனக் கருதப்படுகிறது.
கூகுள் லூன் இலங்கைக்குக் கொண்டுவரப்படுவதனூடாக, இலங்கையின் இணைய சேவையைப் பெறும் இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்குமென்பதோடு, இணைய சேவைகளுக்கான கட்டணமும் குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
விமானங்கள் பறப்பதை விட இரண்டு மடங்கு உயரமானதும் வெற்றுக்கண்ணுக்கு புலப்படாத ஆகாய பரப்பிலேயே இந்த பலூன்கள் நிலை கொண்டிருக்கும். மறுசுழற்சி செய்யக்கூடிய இந்த பலூன்கள், 180 நாட்கள் வாழ்தகவுடையன என இலங்கை தகவல்கள் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவராண்மை அறிவித்துள்ளது.
அமைச்சர் ஹரினும் உறுதிப்படுத்தினார்
திவேக இணைய வசதியை வழங்கும் கூகுள் நிறுவனத்தின் 'செயற்றிட்டம் லூன்' (Project Loon) இன் பலூன்களில் ஒன்று, கண்டி, கம்பளை புப்புரஸ்ஸ டெல்டா தோட்டம், டேசன் பிரிவு முதலாம் இலக்க தேயிலை மலையில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், பலூன் விழவில்லை என்றும், அது பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது என்றும் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
தன்னுடைய டுவிட்டர் கணக்கிலேயே அவர், மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். கூகுள் நிறுவனத்தின் கண்காணிப்பின் கீழ், அந்த பலூன், பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
14 minute ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
2 hours ago
5 hours ago