2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

பழைய தொழில் செய்த தாய்லாந்து யுவதிகள் சிக்கினர்

Editorial   / 2023 ஜனவரி 24 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்து கொழும்பு உள்ளிட்ட அண்மைய பிரதேசங்களில் ஆறு மசாஜ் நிலையங்களில் பணியாற்றினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், தாய்லாந்து யுவதிகள் 15 பேர், குடிவரவு குடியகல்வு திணைக்கள விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.  

கல்கிஸை மற்றும் கொள்ளுப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் உள்ள மசாஜ் நிலையங்களிலேயே இவர்கள் பணியாற்றியுள்ளனர். அவர்களில் சிலர் விபசார தொழிலும் ஈடுபட்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் நால்வருக்கா விசா நாட்கள் நிறைவடைந்துள்ளது. ஏனையோர் சுற்றுலா விசாவிலேயே இலங்கைக்கு வருகைதந்து இவ்வாறு பணியாற்றியுள்ளனர்.

 நாட்டிலிருந்து வெளியேற்றும் வரையிலும் வெலிசறை தடுப்பு முகாமில் அவர்களை தடுத்துவைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .