Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது வாடிக்கையாளரிடம் வழிப்பறி செய்தார் எனும் குற்றச்சாட்டில், விபசாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பெண்ணொருவர், கிருலப்பனை பொலிஸாரால் கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கிருலப்பனையை வசிப்பிடமாகக் கொண்ட சந்தேகநபரான துஷார டி சில்வா, தனது தாய் ரி.டி.சிரியானி, மாமா யு.நந்தசேனவுடன் இணைந்து, வாடிக்கையாளரான முறைப்பாட்டாளரிடம் வழிப்பறி செய்ததுடன், பிளேட்டால் வெட்டி காயங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் குற்றஞ்சாட்டினர்.
வீதியால் சென்று கொண்டிருந்த தன்னை மறித்த குறித்த பெண், அவரது வீட்டுக்கு பலவந்தமாக அழைத்து சென்றதாகவும், அவ்வீட்டிலிருந்து திரும்பி வருகையில் பெண்ணின் தாயும் மாமனாரும் தன்னிடமிருந்த பொருட்களை வழிபறி செய்து பிளேட்டினால் கீறி தன்னை காயப்படுத்தியதாகவும் முறைப்பாட்டாளர் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
அந்த பெண்ணை இனங்காண்பதற்காக அடையாள அணிவகுப்பும் நடத்தப்பட்டது. அதன்போது முறைப்பாட்டாளர் அப்பெண்ணை அடையாளம் காட்டியுள்ளார்.
அடையாளம் காண்பிக்கப்பட்ட குறித்த பெண், விபசாரத்தில் ஈடுபடுவதாகவும் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் மேற்கூறிய இருவரையும் பயன்படுத்தி வழிப்பறிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கிருலப்பனை பொலிஸார், நீதமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
இவரால் பாதிக்கப்பட்ட மேலும் பலர், தமது கௌரவம் கருதி முறைப்பாடு செய்யவில்லையென பொலிஸார் கூறினார்.
குறித்த பெண், 3,000 ரூபாய் ரொக்கப்பிணையிலும் 100,000 ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago