Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜனவரி 12 , பி.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.ஆர்.லெம்பேட்
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோவை எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அவரது அலுவலகத்தில் வைத்து கடிதம் ஞாயிற்றுக்கிழமை(12) கையளிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கடந்த 09 ஆம் திகதி செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளும் வகையில் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் எதிர்வரும் 15ம் திகதி ஆஜராகுமாறு அழைப்பு கடிதம் வழங்கப்பட்டது.
மன்னார் கோந்தை பிட்டியில் அமைந்துள்ள குற்ற விசாரணை அலுவலகத்தில் இருந்து வருகை தந்த பொலிஸார் குறித்த அழைப்புக்கடிதத்ததை கையளித்துள்ளனர்.
மன்னாரில் உள்ள அவரது வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை (12) காலை சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவரது மனைவியிடம் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில்,அவர் வீட்டில் இல்லாத நிலையில் ஞாயிற்றுக்கிழமை (12) மதியம் மன்னாரில் உள்ள அலுவலகத்திற்குச் சென்று குறித்த கடிதத்தை கையளித்தனர்.
எனினும், எதிர்வரும் 15ம் திகதி தன்னால் விசாரணைக்கான சமூகளிக்க முடியாத நிலை உள்ளதாகவும்,அதற்கான திகதி யை மாற்றி வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அதற்கு அமைவாக எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று வாக்கு மூலத்தை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது
21 minute ago
34 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
34 minute ago
1 hours ago
2 hours ago