2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

பிரசன்ன ரணவீரவின் பிணை மனு நிராகரிப்பு

Simrith   / 2025 ஜூலை 14 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிபத்கொட பகுதியில் சட்டவிரோத சொத்து விற்பனை வழக்கில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர ஜூலை 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று மஹர நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவர் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். 

விசாரணையின் போது, பிரசன்ன ரணவீர சமர்ப்பித்த பிணை மனுவும் நீதவானால் நிராகரிக்கப்பட்டது.

கிரிபத்கொடையில் அரசுக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களைத் தயாரித்து தனியாருக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பிரசன்ன ரணவீர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் தேடப்பட்டு வந்தார்.

கைது நடவடிக்கையைத் தவிர்த்து வந்ததற்காக ரணவீரவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நீதிமன்றம் முன்னர் உத்தரவு பிறப்பித்திருந்தது.

61 நாட்கள் கைது நடவடிக்கையிலிருந்து தப்பித்த பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்த பிரசன்ன ரணவீர, மே மாதம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .