2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் இடமாற்றம்

Editorial   / 2018 ஒக்டோபர் 31 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றிவந்த ஊழியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

நிரந்தர நியமனம் இன்றி பணியாற்றி வந்த ஊ​ழியர்களுக்கு, கடமைக்கு திரும்ப வேண்டாமென, மேலதிகாரிகளால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அலரிமாளி​கையில் கடமையாற்றிவந்த பெரும்பாலான ஊ​ழியர்கள், அரச நிர்வாக அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் சாரதிகள் இருவரும், புள்ளிவிபரவியல்  திணைக்களத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனரெனவும் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .