2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

’பிரபாகரனுக்கு இந்து அடையாளம் இல்லை’

Nirosh   / 2021 டிசெம்பர் 05 , பி.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒருபோதும் இந்து அடையாளத்தில் சிக்கிக்கொள்ளவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

தமிழர்கள் என்பதால் நான் புலிகளை ஆதரிக்கவில்லை. சிங்கள் பௌத்த பேரினவாத ஒடுக்குமுறைக்கு உள்ளாகக்கூடிய ஒரு தேசிய இனமாக தமிழர்கள் இருப்பதாலேயே நான் புலிகளை ஆதரிக்கிறேன் எனவும் கூறியுள்ளார். 

சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு எதிராக தமிழ் இந்து சிறுபான்மை வாதம் என்றே வைத்திருக்க வேண்டும். சிங்களத்துக்கு எதிராக தமிழ், பௌத்ததுக்கு எதிராக இந்து, பேரினவாதத்துக்கு எதிராக சிறுபான்மை வாதம் என்கிற அரசியலையே புலிகள் கையில் எடுத்திருக்க வேண்டும். 

ஆனால், எந்த இடத்திலும் இந்துக்கள் தாக்கப்படுகிறோம் என பிரபாகரன் கூறவில்லை. மாறாக தமிழ்த் தேசிய இனம் ஒடுக்கப்படுகிறது என்றே பிரபாகரன் கூறினார். மறந்தும்கூட பிரபாகரன் தங்களை இந்துகள் என்கிற அடையாளத்துக்குள் சிக்கிக்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .