Editorial / 2020 டிசெம்பர் 25 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
பிறந்த நாள் விருந்துக்கு சென்ற எட்டு உறுப்பினர்கள் உட்பட 10 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என ஹட்டன்- டிக்கோயா பொது சுகாதார பரிசோதகர் ஆர்.பாலகிருஸ்ணன் தெரிவித்தார்.
ஹட்டன்- டிக்கோயா நகரசபையின் ஆளும் எதிரணி உறுப்பினர்கள் அடங்களாக எட்டு பேர் நகர சபையின் செயலாளர் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் ஒருவருமே 14 நாட்களுக்கு சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஹட்டன்- டிக்கோயா நகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினரின் பிறந்ததின விருந்துபசாரத்தில் கடந்த 19 ஆம் கலந்து கொண்டவர்களே நேற்று (24) மாலை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹட்டன் டிக்கோயா நகரசபையின் உறுப்பினர் ஒருவருக்கு நேற்று (24) தொற்று உறுதியானதையடுத்தே மேற்படி 10 பேரும் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு அன்றைய தினமே பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்து அதன் மாதிரிகள் நுவரெலியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என பொது சுகாதார. பரிசோதகர் பாலகிருஸ்ணன் தெரிவித்தார்.
மேலும் தொற்றாளரான அக்கரப்பத்தனை பிரதேசசபை தலைவருடன் தொடர்பை கொண்டிருந்த ஹட்டன் டிக்கோயா நகரசபை தலைவர் கடந்த 22 ஆம் திகதி முதல் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago