2025 மே 02, வெள்ளிக்கிழமை

பிறிதொரு தினம் கோரினார் ஜெயருவன்

Freelancer   / 2021 ஓகஸ்ட் 31 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ஜெயருவன் பண்டார, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக்கு வேறொரு தினத்தை வழங்குமாறு அந்த திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குற்றப் புலனாய்வுப் திணைக்களத்துக்கு சென்ற ஜனாதிபதி சட்டத்தரணி திசத் விஜேகுணவர்தன, டொக்டர் ஜெயருவன் பண்டார சார்பாக இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார் என்று சிரேஷ்ட சி.ஐ.டி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
  
தேசிய ஔடத ஒழுங்குமுறை அதிகாரசபை மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் குறித்து கருத்து வெளியிட்டமை தொடர்பான விசாரணைக்காக இன்று (31) காலை 8:00 மணிக்கு சீ.ஐ.டியில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தேசிய ஔடத ஒழுங்குமுறை அதிகாரசபையின் தலைவர் டொக்டர் ரசித விஜேவர்தன மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உத்பால சந்திரவன்ச ஆகியோரால் சி.ஐ.டியிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டது.

தேசிய ஔடத ஒழுங்குமுறை அதிகாரசபையிலிருந்து தரவை நீக்குவது மற்றும் மருந்து தயாரிப்பது குறித்து டொக்டர் ஜெயருவன் பண்டார வெளியிட்ட அறிக்கை தொடர்பான விசாரணைகளுக்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X