Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூன் 25 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை யாசகத்தில் ஈடுபடுத்தல், பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதற்கு ஈடுபடுத்தல் மற்றும் 16-18 இற்கும் இடைப்பட்ட பிள்ளைகள் வீட்டுப் பணி உள்ளிட்ட அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதை 2025.07.01 ஆம் திகதி தொடக்கம் முழுமையாகத் தடைசெய்வதற்கு தீர்மானமானிக்கப்பட்டுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சால் சமர்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவை யோசனைக்கே அங்கிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
வீதியோரங்களில் யாசகத்தில் ஈடுபடுத்தல், பண்டங்கள் விற்பனை செய்வித்தல், வீட்டுப் பணிகள் உள்ளிட்ட அபாகரமான தொழில்களில் சிறுவர்களை ஈடுபடுத்துவதற்கு எதிரான சட்ட ஏற்பாடுகளை அமுல்படுத்தல்
சிறுவர் உரிமைகள் சமவாயத்திற்கமைய 18 வயதுக்குக் குறைவான அனைவரும் சிறுவர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது. புதிய புள்ளிவிபரங்களுக்கமைவாக, நாட்டிலுள்ள மொத்த சனத்தொகையில் 30 சதவீதமானவர்கள் சிறுவர்களாவர்.
ஒருசில சிறுவர்கள் பல்வேறு காரணங்களால் ஏதேனுமொரு தொழில் செய்வதற்கு உந்தப்படுவதும், தமது தாய் தந்தையுடன், மனித வியாபாரத்திற்கு இரையாகி 'வீதியோர சிறுவராக' பெற்றோர் அல்லாதவர்களுடன் பொது இடங்களில் யாசகத்தில் ஈடுபடுத்தப்படுவதாகவும், பல்வேறு பொருட்கள் விற்பனையில் ஈடுபடுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை யாசகத்தில் ஈடுபடுத்தல், பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதற்கு ஈடுபடுத்தல் மற்றும் 16-18 இற்கும் இடைப்பட்ட பிள்ளைகள் வீட்டுப் பணி உள்ளிட்ட அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதை 2025.07.01 ஆம் திகதி தொடக்கம் முழுமையாகத் தடைசெய்வதற்கு தீர்மானம்
அதற்கான இயலுமை கிட்டும் வகையில் தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகளை அந்தந்த அதிகாரிகள் மூலமாக கடுமையாக அமுல்படுத்துவதற்கும், அதுதொடர்பான விரிவான பரப்புரை வேலைத்திட்டத்தின் மூலம் பொதுமக்களைத் தெளிவுபடுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago