Freelancer / 2024 செப்டெம்பர் 24 , மு.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அமைச்சரவை இன்று (24) பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுத் தேர்தலை நடத்தும் நோக்கில் குறித்த அமைச்சரவை நியமனங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய பாராளுமன்றம் தேர்ந்தெடுக்கப்படும் வரை மேற்படி அமைச்சரவை அமைச்சர்களின் பணிகள் தொடரும்.
எனினும், அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அமைச்சரவையைக் கூட்டி பாராளுமன்றத் தேர்தலுக்கான நிதியை ஒதுக்கீடு செய்ததன் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைப்பார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர், மேலும் பல புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இதன்படி, தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு இன்று நள்ளிரவில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. R
13 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
4 hours ago
5 hours ago