2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

புதிய பிரதி சபாநாயகர் தெரிவு இன்று

Freelancer   / 2022 மே 05 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய பிரதி சபாநாயகர் தெரிவு சபாநாயகர் தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.

அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் வெளியேறி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்ததை தொடர்ந்து சுதந்திர கட்சியின் உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து  விலகும் தீர்மானத்தை ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக கடந்த மாதம் முதல் வாரத்தில் அறிவித்தார்.

பிரதி சபாநாயகரின் பதவி விலகல் தீர்மானத்தை ஜனாதிபதி அப்போதைய சூழ்நிலையில் ஏற்றுக்கொள்ளாததை தொடர்ந்து ரஞ்சித் சியம்பலாபிடிய  நிபந்தகைளின் அடிப்படையில் கடந்த மாதம் 30 ஆம் திகதி வரை பிரதி சபாநாயகராக பதவி வகிக்க தீர்மானித்துள்ளதாக சபைக்கு அறிவித்தார்.

ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை பிரதி சபாநாயகர் பதவி வகிப்பதாக சுதந்திர கட்சியின் உறுப்பினரது தீர்மானத்தை ஜனாதிபதி உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து பாராளுமன்றில் பிரதி சபாநாயகர் பதவி வெற்றிடமாகியுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7