R.Maheshwary / 2020 டிசெம்பர் 09 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ்மா அதிபரின் அலுவலக பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன உள்ளிட்டவர்கள் நேற்றிலிருந்து (7) சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நேற்று (08) நடைபெற்ற தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்திலும் பொலிஸ்மா அதிபர் கலந்துக்கொள்ளவில்லை என, பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன.
பொலிஸ் தலைமையக கட்டடத்தின் 3ஆம் மாடியில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொலிஸ் தலைமையகத்தின் ஏனைய பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்துக்குச் செல்வது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
34 minute ago
41 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
41 minute ago
52 minute ago