Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Freelancer / 2022 நவம்பர் 16 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நேற்று மாலை 5 பேர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
22 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்ட 05 கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு வழங்கப்பட்டு வாருகின்றது.
இந்தநிலையில் குறித்த புனர்வாழ்வு நிலையத்தில் நீதிமன்ற உத்தரவுக்கமைய தங்க வைக்கப்பட்டு புனர்வாழ்வு வழங்கப்பட்டவர்களில் 5 பேரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்ட போதே குறித்த 5 பேரும் தப்பியோடியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த பகுதியில் புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து தப்பியோடியவர்களை கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
18 May 2025
18 May 2025