Editorial / 2019 ஒக்டோபர் 06 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தாண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளது.
www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.
இதேவேளை, மாவட்ட மற்றும் நாடளாவிய ரீதியிலான தரப்படுத்தல் வெளியிடப்பட மாட்டாது என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகள் தொடர்பான மேன்முறையீடுகளை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ள முடியும்.
கொழும்பு மற்றும் ஜயவர்தனபுர கல்வி வலயங்களை சேர்ந்த பாடசாலை அதிபர்கள் நாளை (07) முற்பகல் 9 மணிக்கு பின்னர் பரீட்சைகள் திணைக்களத்தில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.
ஏனைய பாடசாலைகளுக்கு பெறுபேறுகள் தபாலில் அனுப்பிவைக்கப்படும் என, இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago