2023 ஜூன் 07, புதன்கிழமை

‘புலிகள் எவரும் இராணுவத்திடம் சரணடையவில்லை’

Editorial   / 2019 ஜூலை 02 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

இறுதி யுத்தக்காலப் பகுதியில், தமிழீழ விடுதலை புலிகள் எவரும் தங்களிடம் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

தகவ​லுக்கான உரிமைச் சட்டத்தின் கீழ், 2019.04.04 அன்று அனுப்பிவைக்கப்பட்ட விண்ணபத்துக்கு, 2019 ஜூன் 25ஆம் திகதி குறித்து அனுப்பிவைக்கப்பட்டுள்ள பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அதிகாரியான பிரிகேடியர் ஏ.எம்.எஸ். பீ அத்தபத்து என்பவரினால் கையொப்பமிடப்பட்டு அந்தக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்மிரரின் சார்பில்,  இலங்கை இராணுவத்துக்கு அனுப்பட்டிருந்த விண்ணப்பத்துக்கு, மூன்று மாதங்களுக்குப் பின்னர் சிங்கள மொழியில் கிடைக்கப்பெற்றுள்ள பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இறுதி யுத்தக்காலத்தில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இலங்கை இராணுவத்திடம் சரணடையவில்லை. அவர்கள் இலங்கை அரசாங்கத்திடமே சரணடைந்துள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சரணடைந்த புலிகள் அமைப்பின் உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பில் அதிகாரங்கொண்ட நிறுவனமான, புனர்வாழ்வு ஆணையாளர் காரியாலயத்திடம் குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .