Mayu / 2023 டிசெம்பர் 08 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேய், பிசாசு, ஆவிகளை விரட்டியடிக்கும் பௌத்த பத்தினி தெய்வ வழிபாட்டு ஆலயத்தில் நோய்யை குணப்படுத்துவதற்காக சென்ற சகோதரன், சகோதரி மீது ஆலய பூசாரி மேற்கொண்ட தாக்குதலில் சகோதரன் உயிரிழந்துள்ளதோடு சகோதரி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு - வாகரை மாங்கேணி பிரதேசத்தில் பௌத்த பத்தினி தெய்வ வழிபாட்டு ஆலயத்தில் புதன்கிழமை (6) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தாக்குதலை மேற்கொண்டவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு புனானை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய அனுரா ஜெயலத் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் அவரது சகோதரியான 61 வயதுடைய சுமிதா ஜரங்கனி என்பவரே படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபருக்கு காலில் மின்சார தாக்குதலால் ஏற்பட்ட நோயை குணப்படுத்துவதற்காக பேய் பிசாசு ஆவிகளை விரட்டியடிக்கும் மாங்கேணி பிரதேசத்திலுள்ள பௌத்த பத்தினி தெய்வ வழிபாட்டு ஆலயத்திற்கு அடிக்கடி சென்று நோயை குணப்படுத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் விசாரணைகளில்:
பூசகரின் மனைவியுடன் நோயை குணப்படுத்துவதற்காக சென்ற நபர் தொடர்பு வைத்திருந்ததன் காரணமாக, பூசகர் மனைவியை கத்தியால் தாக்க முற்றபட்ட நிலையில் அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து, மனைவியுடன் தொடர்புபட்டவர் மீதும் அவரது சகோதரி மீதும் காரின் மீதும் மேற்கொண்ட தாக்குதலில் நபர் உயிரிழந்ததுடன் காரையும் அடித்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago