2021 செப்டெம்பர் 29, புதன்கிழமை

பூஜித் , ஹேமசிறி மீதான விசாரணைகள் நிறைவு

Editorial   / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக குற்றம் புரிந்ததாக தெரிவித்து குறித்த நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று (23) கொழும்பு மேலதிக நீதவான் ஆர்.யு. ஜயசூரியவுக்கு இதனை அறிவித்துள்ளது.

சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெறுவதற்காக விசாரணைக் கோவை கையளிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் மன்றுக்கு அறிவித்தது.

இதற்கிணங்க, அடுத்த வருடம் மார்ச் மாதம் 17 ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அன்று மன்றில் ஆஜராகுமாறு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .