Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Kamal / 2019 நவம்பர் 30 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவரே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு காரணமென தெரிவிக்கும் ஐ.ம.சு.மு எம்.பி சந்திம வீரக்கொடி, ஐ.தே.க தலைவர் மீதான வெறுப்பு காரணமாகவே பொதுஜன பெரமுனவை மக்கள் தெரிவு செய்ய காரணமானது என்றும் தெரிவித்தார்.
உள்நாட்டு ஊடகமொன்றில் இன்று (30) இடம்பெற்ற நேர்க்காணல் ஒன்றில் பங்கேற்று மேலும் கருத்துரைத்த அவர்,
முன்னைய அரசாங்கத்தில் நிதிக்குற்றப்புலனாய்வு திணைக்களத்தை நிறுவி
எவருக்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டும் என்பதை ஆட்சியாளர்களே தீர்மானித்தனர் எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அமெரிக்கர் எனவும், சர்வாதிகாரினவும் விமர்சித்திருந்தாலும், அவர் வெற்றிபெற்றதன் பின்னர் நல்ல பல மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேபோல், அவரின் வெற்றி இலங்கையின் பக்கம் முதலீட்டாளர்களின் அவதானத்தை ஈர்க்கச் செய்துள்ளதாகவும் தெரிவித்த அவர், இன்றும் ஐ.தே.கவிடம் பெரும்பான்மை பலம் உள்ளதால் மூன்றிலிருரண்டு அதிகாரத்தை பெற்றுகொடுத்து நாடாளுமன்றத்தை கலைக்க அக்கட்சி ஒத்துழைக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago