Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 மார்ச் 17 , மு.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் தேர்தல்கள் காலப்பகுதியில், கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றின் நிலைமையைக் கருத்திற்கொண்டே, தேர்தலை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் இது தொடர்பான கலந்துரையாடலொன்று, அடுத்த வாரமளவில் நடத்தப்படும் என்றும் தெரியவருகிறது.
கொவிட் 19 வைரஸ் காரணமாக நாட்டுக்குள் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பான கலந்துரையாடலொன்று, சுகாதாரப் பிரிவுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே, மேற்கண்ட விடயம் தொடர்பில் அவதானிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளால் நடத்தப்படும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் நிறுத்தப்படினும், தேர்தல்கள் ஆணைக்குழுவால், உரிய அதிகாரிகளுக்குப் பயிற்சிவித்தல் மற்றும் ஆலோசனை வழங்கல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டி இருப்பதால், நோய்த் தொற்றின் நிலைமை குறித்து, சில தினங்களுக்கு அவதானித்து முடிவு எடுக்கப்படவுள்ளதாக, இந்தக் கலந்துரையாடலின் போது ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டுக்குள் ஏற்பட்டுள்ள நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, அரசாங்கம் முன்னெடுத்துள்ள அனைத்து வேலைத்திட்டங்களுக்கும், அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு கிட்டுமென எதிர்பார்ப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (16) நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது தொடர்ந்துரைத்த அவர், தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில், இதுவரை எவ்விதத் தீர்மானமும் எட்டப்படவில்லை என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 Jul 2025