2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பொதுப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்

Editorial   / 2020 ஏப்ரல் 19 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுப் போக்குவரத்து நடவடிக்கைகள் நாளை (20) முதல் வழமைக்கு திரும்பவுள்ளன. 

அத்துடன், பொதுப் போக்குவரத்து சேவை குறித்து சில கட்டுப்பாடுகளை அதிகாரிகள் விதித்துள்ளனர்.

தொழில்களுக்குச் செல்வோரின் தேவைக்கருதி 5,000 இ.போ.ச பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சகல பஸ்களும் கிருமி தொற்று நீக்கம் செய்யப்படவுள்ளதுடன், பயணிகளின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, பஸ் ஒன்றில்  25 பேர் மாத்திரமே பயணிக்க முடியும்.

அத்துடன், நாளை (20) முதல் அலுவலக ரயில் சேவையும் முன்னெடுக்கப்படவுள்ளது. ரயில் பெட்டி ஒன்றில் 50 பயணிகள் மாத்திரமே பயணிக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பயணிகள் சகலரும்  கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்பதுடன், சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்காதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் பொதுப் போக்குவரத்தை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 
  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X