2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பொது சுகாதார பரிசோதகர் மீது உமிழ்ந்த நபர் விளக்கமறியலில்

J.A. George   / 2021 ஓகஸ்ட் 04 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கி, அவர் மீது உமிழ்ந்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை இன்று (04) தெரிவித்தார்.

கிரிஉல்ல - புஸ்கொலதெனிய பிரதேசத்தில் நேற்று கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கொவிட் தொற்றாளர் ஒருவரின் வீட்டுக்கு கடமை நிமித்தம் சென்றிருந்த, பொது சுகாதார பரிசோதகர் மீது, சந்தேக நபர் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X