Freelancer / 2023 மார்ச் 17 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் பொருளாதாரம் 2021ஆம் ஆண்டை விட 2022ஆம் ஆண்டில் 7.8 சதவீதத்தால் சுருங்கியுள்ளது என்று தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
தேசிய கணக்கு மதிப்பீடுகள் குறித்து திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டில் 13,037,934 மில்லியன் ரூபாயாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2022ஆம் ஆண்டில் 12,017,849 மில்லியன் ரூபாயாக குறைவடைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2,917,721 மில்லியனில் இருந்து 2021 ஆம் ஆண்டில் 3,331,073 மில்லியன் ரூபாயாக பதிவு செய்யப்பட்டு, 12.4 சதவிகிதம் எதிர்மறையான சதவீதத்தைப் பதிவு செய்ததுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
2022 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைகள் நடவடிக்கைகள் முறையே 4.6 சதவீதம், 16.0 சதவீதம் மற்றும் 2.0 சதவீதம் குறைந்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை ரூபாயின் பெறுமதியானது குறிப்பிடத்தக்க வீதத்தில் வீழ்ச்சியடைந்தமை உட்பட காரணிகளால் உள்நாட்டில் அதிகூடிய பணவீக்கத்தை ஏற்படுத்திய விலைச் சீர்திருத்தங்களின் விளைவாக 2022 ஆம் ஆண்டில் இலங்கைப் பொருளாதாரம் மெதுவான செயல்திறனைப் பதிவு செய்தாக குறிப்பிடப்படுகிறது.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago