2025 ஜூன் 23, திங்கட்கிழமை

பொருளாதார பாதிப்பு தொடர்பான மதிப்பீடு

Editorial   / 2019 ஜூன் 24 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் காரணமாக, சிறிய, நடுத்தர வர்த்தகர்களுக்கு ஏற்பட்ட, பொருளாதார பாதிப்பை மதிப்பீடு செய்து, ஆய்வறிக்கையொன்றை தயாரிக்கவுள்ளதாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு, புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த மதிப்பீட்டு பணிகள் மாவட்ட ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஒவ்வொரு மாதமும் பணிபுரிந்த சேவையாளர்களின் எண்ணிக்கை, மொத்த வருமானம் என்பவைத் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலால் பாதிப்புக்குள்ளான நிறுவனங்கள், வாகனங்கள், கட்டடடங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள் போன்றவைத் தொடர்பிலும் தகவல்களும் சேகரிக்கப்படவுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .