2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

பொலிஸ் விசேடப் படையணியில் பதவியுயர்வுகள் தாமதமாகியுள்ளன

Editorial   / 2018 டிசெம்பர் 27 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் விசேடப் படையணியின் 350 பேருக்கான பதவியுயர்வுகள் தாமதமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பதவியுயர்வுக்கான பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு இந்த வருடம் மே மாதமே பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும் இதற்கான அனுமதி பொலிஸ்மா அதிபரால் இதுவரை வழங்கப்படவில்லை.

எனினும் கடந்த செப்டம்பர் மாதம் பதவியுயர்வுகள் வழங்கப்படுமென, பொலிஸ் விசேடப் படையணியினர் எதிர்பார்த்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில், பொலிஸ் விசேடப் படையணியின் கட்டளையிடும் அதிகாரி எம்.ஆர்.லத்தீபால் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கு நேற்றைய தினம் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .