2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி மீது வாகனம் மோதி விபத்து

Editorial   / 2019 பெப்ரவரி 24 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரளை பொலிஸ் நிலையப் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி மீது டிபென்டர் வாகனம் ஒன்று  மோதியதால் பொறுப்பதிகாரி படுங்காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடமை நிமித்தம் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தப் போதே இவ்விபத்துக்கு முகங்கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை 4.35 மணியளவில் கொழும்பு- காலி பிரதான வீதியின் டுப்ளிகேசன் சந்தியில் வைத்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன் குறித்த டிபென்டர் வாகனமும் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளது.

தப்பிச் சென்ற வாகனம் ​தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .