Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Editorial / 2019 மே 30 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
கருவாத்தோட்டம் சினமன்ட் கிரான்ட் சொகுசு வீடமைப்புத் தொகுதியில் பாரியளவில் போதை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் நேற்று (29) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த வர்த்தகரின் வீட்டிலிருந்து வெவ்வேறு வகைகளிலான 410 போதை மாத்திரைகளும் 3 மில்லிகிராம் ஹெரோய்ன், குஷ் போதைப்பொருள் 11 கிராம், நவீன தொழிநுட்பத்துடனான தராசு, போதைப் பொருள்களை பொதி செய்வதற்கான கடதாசிகள் 2500 என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
10 மாடிகளைக் கொண்ட குறித்த வீடமைப்புத் தொகுதியில் 3 மாடியிலிருந்து இந்தப் போதைப் பொருள்கள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கட்டடத்தில் முதலாவது மாடியில் குடியிருக்கும் இந்த வர்த்தகர், மாதாந்தம் 1 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வாடகை அடிப்படையில் மற்றொருவரின் பெயரில், மூன்றாவது மாடியிலுள்ள வீட்டைப் பெற்றுள்ளாரென்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மருதானை, பஞ்சிகாவத்தை பிரதேசங்களில் வாகன உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் 3 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய சந்தேகநபரை 7 நாள்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
18 minute ago
48 minute ago
1 hours ago