2025 ஜூலை 12, சனிக்கிழமை

போலிச்செய்தி பரப்பினால் தண்டனை

Editorial   / 2020 மார்ச் 12 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக, தேவையற்ற போலித் தகவல்களை பரப்பி வருவோருக்கு எதிராக, கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என, பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாப்பயணிகளுக்கான வழிகாட்டியின் மகனுக்கும் கொரோன ​தொற்று ஏற்பட்டுள்ளதாக, சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தி, முற்றிலும் போலியானது என்றும் பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. எனவே, பாடசாலை மாணவர்களின் பெற்றோர் அச்ச​மடையத்தேவையில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கையில் இதுவரைக்கும் கொரோன வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் மாத்திரமே இனங்காணப்பட்டுள்ளார் என்றும் 29 பேர், சந்தேகத்தின் பேரில் மாத்திரமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .