R.Tharaniya / 2025 டிசெம்பர் 08 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் செயற்பட்டு கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணியை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று திங்கட்கிழமை (08) உத்தரவிட்டார்.
ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடை போல அணிந்து உள்நுழைந்து வழக்காடி தருவதாக பொதுமக்கள் பலரிடம் பல இலட்சம் ரூபாவை மோசடி செய்ததுடன் சில சட்டத்தரணிகளையும் ஏமாற்றிய போலி சட்டத்தரணி ஒருவரை கடந்த நவம்பர் 8ம் திகதி ஒந்தாச்சிமடம் பகுதியில் வாடகைக்கு குடியிருந்த வீடு ஒன்றில் வைத்து கைது செய்தனர்
இவ்வாறு கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வழக்கு தொடர்பாக இன்று சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் இவரை எதிர்வரும் 15 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கனகராசா சரவணன்
44 minute ago
09 Dec 2025
09 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
09 Dec 2025
09 Dec 2025