2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

போலி நாணயத்தாள்களுடன் பெண் கைது

Freelancer   / 2025 ஜூலை 15 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரட்டுவை நகரில் போலி நாணயத்தாள்களுடன் 52 வயது பெண் ஒருவரை நேற்று (14) மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது குறித்த சந்தேகநபரிடமிருந்து 10 போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டன.

விசாரணையில், சந்தேகநபரின் வீட்டிலிருந்து போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்தப்பட்ட அச்சு இயந்திரம், 25 போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்கள், 08 போலி 1,000 ரூபாய் நாணயத்தாள்கள், ஒரு போலி 100 ரூபாய் நாணயத்தாள் மற்றும் 02 போலி 20 ரூபாய் நாணயத்தாள்கள் மீட்கப்பட்டன.

மொரட்டுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .