Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 17 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான, போலி நாணயத் தாள்களுடன், பியகம பெரகஸ் சந்தி பிரதேசத்தில் வைத்து ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரிடமிருந்து 5,000 ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்கள்-38, 1,000 ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்கள்-300, 500 ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்கள்-165 வும் கைப்பற்றப்பட்டுள்ளனவென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற ஒழிப்புப் பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கைது செய்யப்பட்ட 40 வயதான சந்தேகநபர், மல்வானை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரை மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்குப்பட்டுள்ளனவென அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago