2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

புகையிரதப் பயணிகள் 95 பேரிடம் தண்டம் அறவீடு

Princiya Dixci   / 2016 ஜனவரி 27 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்லெவெல புகையிரத நிலையத்தில் புகையிரதப் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புகையிரதப் பயணச்சீட்டு இல்லாமலும் மூன்றாவது தரப் பயணச்சீட்டைப் பெற்றுக்கொண்டு இரண்டாந் தரத்தில் பயணித்த 95 பயணிகளிடமிருந்து தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

இவர்களிடமிருந்து 2 இலட்சத்து 42 ஆயிரத்து 50 ரூபாவை தண்டப்பணமாக அறவிட்டுள்ளதாகவும் சுமார் ஐந்து மணித்தியாலங்களுக்குள் 81 பேரிடமிருந்து மாத்திரம் 2 இலட்சத்து 9 ஆயிரத்து 790 ரூபாவை அறவிட்டுள்ளதாகவும் ரயில்வே பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X