2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

புத்த சாசனத்தை அழிப்பதற்குச் சதி: மஹிந்த

Kanagaraj   / 2016 ஜனவரி 24 , பி.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பௌத்த பிக்குமார்கள் தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள சட்டமூலம் நிறைவேற்றப்படுமாயின், பௌத்த துறவியொருவரைக் கண்டுபிடிப்பது, எதிர்காலத்தில் பாரிய பிரச்சினையாகிவிடும். நாட்டிலுள்ள பல விகாரைகள், தற்போது மூடப்பட்டு வருகின்றன. இந்த நிலைமை, எதிர்காலத்தில் அதிகரிக்கும் அபாயம் தோன்றும் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்காலை, உஸ்வெவ, குருகொடெல்ல புராதன விகாரையில் வைத்து, ஊடகவியலாளர்களிடம் நேற்றுக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றியுள்ள அவர், 'விகாரைகளில் தங்கியிருக்கும் பிக்குமார்களின் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் கொண்டுவரவுள்ள இந்த புதிய சட்டம் காரணமாக இந்நாட்டுப் பிரஜைகளுக்கும் எதிர்கால பிரஜைகளுக்கும் அசாதாரண நிலைமை தோற்றுவிக்கப்படும்' என்றும் அவர் கூறினார்.

'இந்த நாட்டில் பிரச்சினைகள் ஏற்பட்ட போது, சங்கைக்குரிய தேரர்கள் முன்னால் வந்து, நாட்டைக் காப்பாற்றினர். இந்த புதிய சட்டம் தொடர்பிலும் அவர்கள் குரல் கொடுப்பார்கள் என்று நம்புகின்றேன்' என்று அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X