2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பின்கதவால் வெளியேறினார் பிரிகேடியர்

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் பிரவேசித்த, பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தன, விமான நிலையத்திலிருந்து பின்கதவால் வெளியேறிவிட்டதாக அறியமுடிகின்றது.

அவரை கைதுசெய்யுமாறு கோரி,  கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிக்குகள் தலைமையிலான ஒரு பிரிவினர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ரத்துபஸ்வல தண்ணீர் பிரச்சினை தொடர்பில் வெலிவேரியவில் பொதுமக்கள் நிராயுதபாணிகளாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, அந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளுமாறு பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தனவே உத்தரவிட்டார் என்றும் அந்த போராட்டத்தில் குதித்திருந்தவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தன, துருக்கி தூதுவராலயத்தில் கிடைத்த பதவியை ஏற்றுக்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறியிருந்தார் என்பதுடன் அவரது பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னர் இன்று நாடுதிரும்பினார்.

ஸ்தலத்துக்கு விரைந்த இராஜங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, இது தொடர்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவென்பதை ஒருவாரத்துக்குள் அறிவிப்பேன் என்றார்.

உண்ணாவிரதம் இருந்தவர்கள் அவரது உறுதிமொழியை ஏற்றுக்கொண்டதன் பின்னர் கலைந்துசென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X