Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஒக்டோபர் 16 , பி.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு -கிழக்கு பிரதேசங்களில் வாழும் மலையக மக்களின் பிரதிநிதிகள், ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையின விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் இஸாக் நாடியா ரீட்டாவை, கண்டியிலுள்ள சமூக அபிவிருத்தி நிறுவனத்தில் வைத்து, சனிக்கிழமை (15) சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன்போது, வடக்கு - கிழக்கில் சிறுபான்மையாக வாழ்கின்ற மலையக மக்கள், அரசியல், அபிவிருத்தி மற்றும் அடிப்படைத் தேவைகளில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள்,பாரபட்சம் தொடர்பில், ரீட்டாவிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
1958, 1977, 1983ஆம் ஆண்டு காலப்பகுதிகளில், நாட்டில் இடம்பெற்ற இன வன்முறைகளால் பாதிக்கப்பட்ட நிலையில் இடம்பெயர்ந்து, வடக்கு - கிழக்கு பிரதேசங்களுக்கு சென்று வாழ்ந்து வரும் மலையக மக்கள், தாங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து அறிக்கையொன்றையும் கையளித்துள்ளனர்.
இதேவேளை, தெல்தோட்டை லிட்டில்வெலி தோட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டு, தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்தும் ரீட்டா, கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago