Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Kanagaraj / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் யு.கே. திஸாநாயக்கவை எதிர்வரும் 23ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் அமில ஆரியரத்ன உத்தரவிட்டுள்ளார்.
வவுனியா, குடாகச்சுகொட்டிய குளத்துக்கு அருகில் புதையல் தோண்டிய சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படும் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் யு.கே. திஸாநாயக்கவை கைது செய்வதற்கு தேடிய போதிலும் அவர் மட்டக்களப்பிலும் இல்லை, கொழும்பு திம்பிரிகஸ்யாய வீட்டிலும் இல்லை என்று பொலிஸார் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர்.
சட்டமா அதிபர் ஆலோசனைக்கு அமைய, பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமையவே பிரதி பொலிஸ் மா அதிபரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்திருந்தது.
வவுனியா குடாகச்சுகொட்டிய குளத்துக்கு அண்மையில் கடந்த ஜுன் மாதம் புதையல் தோண்டியோரை கைதுசெய்துசெய்வதற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகளையே வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபராக அன்று கடமையாற்றிய யு.கே. திஸாநாயக்க தடுத்து நிறுத்தினார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
அதன் பின்னர் அவர், கிழக்கு மாகாணத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
புதையில் தோண்டிய குற்றச்சாட்டில் கோடீஸ்வர வர்த்தகர் உட்பட 7பேர், விசேட பொலிஸ் குழுவின் நடவடிக்கையினால் பொலிஸ் அதிகாரி மேவன் சில்வாவினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அவரையும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏழு பேரையும் வவுனியா நீதிமன்றத்தில் அன்றைய தினம் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 May 2025
18 May 2025
18 May 2025