Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரிக்கப்படாத இலங்கைக்காகவே தனது தந்தைக்கு மக்களால் அதிகாரம் வழங்கப்பட்டது என்றுஇ ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் புதல்வரான அமான் அஷ்ரப் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரும் மு.காவின் தவிசாளருமான பஷூர் சேகுதாவூத்தின், 'முஸ்லிம்களுக்கான தனியான அரசு' என்ற அறிக்கைக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
முஸ்லிம்களுக்கான தனியான மாகாணம் வேண்டும் என்பதே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடாக இருந்தது என்றும் அதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் ஒப்புதல் அளித்திருந்தார் என்றும் பஷூர் சேகுதாவூத் கடந்த சனிக்கிழமை (20) காத்தான்குடியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.
தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்துவதற்காக, வரலாற்றின் உண்மைகளை சிதைக்கவேண்டாம் என்று குறிப்பிட்டு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரின் புதல்வரான அமான் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
'இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு தனியான மாகாணம் பிரித்துக் கொடுக்கப்படுமானால் மாத்திரம்இ இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அவ்வாறு தனியான மாகாணம் பிரித்துக்கொடுக்கப்பட வேண்டும். அதுவே நியாயமானது என்று, தனது தந்தையின் முன்னைய அரசியல் வாழ்க்கையின் போது குறிப்பிட்டிருந்தார். எனினும், அவருடைய அரசியல் கருத்துக்கள் சில காலங்களில் மாறுபட்டது' என்று அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து தனது தந்தை மிகவும் தெளிவாகவே இருந்தார் என்றும் அந்த கடித்தில் குறிப்பிடப்பட்டிருந்த அமான்,
சிறுபான்மையினரைப் பிரதிபலிக்கும் கட்சியான எமது கட்சி, தேவையான வரம்புகளை அடைந்து விட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
31 minute ago
2 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
3 hours ago
5 hours ago