2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பொலிஸ் பதிவேடு

George   / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

லொறி - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் பலி

மீரிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிவுல்ல பஸ்யால வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். பஸ்யால நோக்கி பயணித்த லொறியும் மீரிகம நோக்கி பயணித்த மோட்டர் சைக்கிளும் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி, வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்துள்ளார். லோலுவாகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே பலியானதுடன் லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சைக்கிளில் சென்ற வயோதிபர், யானை தாக்கி பலி

பொலனறுவை, விஜயராமபுர கலிங்க எல்ல பிரதேசத்தில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். சைக்கிளில் பயணித்த குறித்த நபரை, நேற்று மாலை 5 மணியளவில் காட்டு யானை தாக்கியுள்ளது.

பொலனறுவை வைத்தியாசலையில அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். அதே பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான வயோதிபரே இவ்வாறு யானை தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .