Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன், பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வுபெறவுள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று (07) அறிவித்தார்.
இதன்போது கருத்துரைத்த ஜனாதிபதி, 'அண்மையில் உருவாகிய பொலிஸ் மா அதிபர்களுள் அனைவருக்கும் முன்மாதிரியாக தனது பதவியின் கௌரவத்தை பாதுகாத்து பணியாற்றிய ஒரு பொலிஸ் மா அதிபராக என்.கே.இலங்ககோன், வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்' என்று கூறினார்.
சுமார் ஐந்தாண்டு காலம் பொலிஸ் மா அதிபராக அளப்பரிய சேவையாற்றியஇலங்ககோனுக்கு, ஜனாதிபதி இதன்போது வாழ்த்து தெரிவித்து, அவரது சேவையைப் பாராட்டினார்.
இந்நாட்டின் 33ஆவது பொலிஸ் மா அதிபராக சேவையாற்றிய என்.கே.இலங்ககோன், எதிர்வரும் 11ஆம் திகதியன்று உத்தியோகபூர்வமாக பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து ஓய்வுபெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .