2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பிள்ளைகளின் பாதுகாப்புக்கு வாழ்க்கைத் திறன்கள் வழி வகுக்கும்

Princiya Dixci   / 2016 ஜனவரி 25 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதலாம் தரத்திலிருந்து 'வாழ்க்கைத் திறன்கள்' என்ற புதிய விடயதானம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி நடாஷா பாலேந்திரா தெரிவித்தார்.

இந்த புதிய விடயதானத்துக்குள் பிள்ளைகளுக்குத் தேவையான பால்நிலைக் கல்வி படிப்படியாக அதனுள் சேர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து இந்த செயற்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன. 

பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமாயின் உடலமைப்பு, பாலியல் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் அறிவுறுத்துவது அவசியமானதாகும். 

பால்நிலைக் கல்வி பாடவிதானத்தை முதலாம் தரத்துக்குள் சேர்த்துக்கொள்ள முடியாது. எனவே, வாழ்க்கைத் திறன்கள் என்ற பெயரில் முதலாம் தரத்தில் அறிமுகப்படுத்த முடியும். 

உடலமைப்பு, அதன் இயல்பு, உடல் பாதுகாப்பு என்பவற்றுடன், உரிய வயது வரும் போது பிள்ளைகளுக்கு பாலியல் கல்வி மற்றும் அது தொடர்பிலான கல்வியைக் கொடுப்பதற்கு இந்த விடயதானம் ஏதுவாக அமையும். 

இந்த அறிவை பாடசாலை விடயதானத்துக்குள் உள்ளீர்க்க முடியுமாயின் அதனூடாக பிள்ளைகளின் பாதுபாப்பை உறுதிப்படுத்த நாம் நினைக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X