Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Kanagaraj / 2015 டிசெம்பர் 23 , மு.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது எட்டு வயதான மகளை களவெடுப்பதற்கு பயிற்றுவித்த அவரது தாய்க்கு (வயது 48) எதிராக இதுவரையிலும் 9 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இங்கிரிய நகரத்தில் பாதணி கடையொன்றில், ஏழுவயது பிள்ளையை பயன்படுத்தி, பணத்தை களவெடுத்ததாக கூறப்படும் அம்மா மற்றும் அவருடைய இரண்டு பிள்ளைகளையும் கொஸ்கம பகுதியில் வைத்து சந்தேகத்தின் பேரில், செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டனர்.
களவெடுத்ததாக கூறப்படும் பணத்தில் 15ஆயிரம் ரூபாய், தலையணைக்கு அடியிலிருந்து பொலிஸாரினால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
தாய், அவருடைய 19 வயதான மூத்த மகள் ஆகியோருடன் சென்றே 8 வயதான தனது இளைய மகளை பயன்படுத்தி இலாச்சியிலிருந்து பணத்தை களவெடுத்துள்ளார்.
இதேவேளை, தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் உள்ள ஆபரணக்கடையொன்றில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவத்துடன் இந்தப்பெண் தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அந்த ஆபரணக்கடையில் சுமார் 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆபரணங்கள் களவாடப்பட்டுள்ளன. இதேவேளை, இந்த குழுவில் மற்றுமொரு பெண்ணும் இருக்கின்றமை சிசிடிவி கமெராவின் ஊடாக இனங்காணப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
3 hours ago