2025 மே 05, திங்கட்கிழமை

மகேஷ் கம்மன்பில பிணையில் விடுதலை

S.Renuka   / 2025 மே 05 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தரமற்ற உரத்தை இறக்குமதி செய்ததற்காக, கைது செய்யப்பட்ட விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மம்பில, தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 சரீர பிணைகளில் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலியால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

சீனாவின் கிங்டாவோ சீவின் பயோடெக் குரூப் கோ. லிமிடெட் நிறுவனத்தால் இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்ட கரிம உரக் கப்பலில் நோய்க்கிருமி பாக்டீரியாக்கள் இருப்பது தெரிந்திருந்தும், சுற்றுச்சூழல் அறிக்கைகள் பெறுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் கடன் கடிதங்களை வழங்கியதற்காக மகேஷ் கம்மம்பில கைது செய்யப்பட்டார்.

இதனால் அரசாங்கத்திற்கு 13 மில்லியன் ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X